search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கேப்டன்"

    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ×